தமிழிலேயே பெயரிடலாமே .......!

பெயர் : இதுக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் ..?

யாருப்பா நீ அப்டின்னு யாராவது கேட்டா நம்ம என்ன பத்தி சொல்கிறோம்  ............

பெயர் தான் இங்க எல்லாமேனு சொல்லவரல..

சரி நான் சொல்ல நினைக்கிறத உங்க பொறுமை போயிடறதுக்குள்ள சொல்லிடறேன்...

எனக்கு பூபதி பூபதி ஒரு நண்பன்..

ஒரு ஆறு  மாசத்துக்கு முன்னாடி ,என் சித்தி பொண்ணுக்கு பேர் வைக்கணும்டா

எதாவது ஒரு நல்ல தமிழ் பெயரா சொல்லுடானு சொன்னான்....

நானும் தேன்மொழி ,தமிழரசி,தாமரை, கனிமொழி,மாதவி,பூங்குழலி, கார்த்திகா,எழிலரசி   அப்டி இட்ப்டினு ஒரு முப்பது  பேர் சொல்லிருப்பேன்,
எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்துட்டு , ஒரு நல்ல பேரா சொல்லு அப்டின்னு சொன்னான் .எனக்கு உசிரே போயிருச்சு.

 சரின்னு நான் ஏதும் சொல்லாம விட்டுட்டேன்.
இரண்டு நாள் கழிச்சு ," மச்சி பேர் வச்சாச்சுடா......" அப்டின்னான்....
பேர் என்னடா அப்டின்னு கேட்டா "வர்ஷினி" அப்டின்கிறான்.....
சரி "பேருக்கு என்னடா அர்த்தம்னு?" அப்டின்னு கேட்டேன்
"தெரில மச்சி "அப்டின்னு சிரிசுகிட்டே சொல்றான்...............

அந்த இடத்துல ஒரு நிமிடம் கூட நிக்க முடியாம அங்க இருந்து கிளம்பிட்டேன்.......

எல்லார்கிட்டயும் ஒரு கேள்வி கேக்கணும்
"தமிழ் நாட்ல பிறந்துட்டு தமிழ்ல ஏன் பேர் வைக்க மட்டேன்கிறோம்..தமிழ்ல நல்ல பேர் இல்லையா என்ன? தமிழ்ல இனிமையான பெயர் இல்லையா என்ன?

என்னோடநண்பர்கள ஒருத்தன் பேர் "இளம்பரிதி" இன்னொருத்தன் பேர் மதியழகன்."

இதவிட நல்ல பொருள்  பொதிந்த பேர் என்ன இருக்க முடியும்........

இன்னும் ஆயிரம் பேர் என்னால சொல்லமுடியும் "இளமாறன், கலையரசன்,பூங்கொடி,தமிழரசி,இசைஅரசன்.........".
நம்ம எல்லாரும் ஒரு நிமிடம் இந்த விசயத்த யோசிச்சு பார்க்கணும்.ஏற்கனவே தமிழ் பெயர் சூட்டுவதை மறந்து விட்ட இந்த சமூகத்துக்கு நம்ம அண்ணன்,அக்கா,சித்தி குழந்தைங்களுக்கு தமிழ்ல பேர் வைக்க அறிவுறுத்துவதன் மூலமா ஒரு மாற்றத்த கொண்டு வரணும்.
நம்ம தலைமுறைல ,நம்ம பசங்களுக்கு கண்டிப்பா தமிழ் பெயர் தான் சூட்டனும்.

சரி "தமிழ் பெயர் சூட்டனும்னு முடிவு பண்ணுனாலும் ,நம்மால் எது தூய தமிழ் பெயர்னு கண்டுபிடிக்க முடியுமா ? அப்டின்னு கேட்டா, அதுக்கு இல்லை அப்டின்றது தான் உண்மையான பதிலா இருக்க முடியும்
"ஆனந்தன் , கணேசன், கந்தசாமி ,கமலம்,பத்மாவதி" இந்த பெயர்கல்லாம் தமிழ் பெயர் மாதிரி தெரிந்தாலும்,இவை பிற மொழி பெயர்கள்தாம்.

"சரி அப்ப எது தமிழ் பெயர்னு எப்டி தெரிஞ்சுக்கிறது? ".
என்னால் முடிந்த அளவிலான தமிழ் பெயர்களை மாலைநேரம்.காம் -ல தொகுத்து வச்சுருக்கேன்.தூய தமிழ் பெயர்களுக்கு இந்த இணைப்பை பயன்படுத்தவும்
தூய தமிழ் பெயர்கள் 

சரி தூய தமிழ் பெயர் சூட்ட முடிலயனாலும் ஷ,ஸ,ஹ,ஸ்ரீ,ஜ  போன்ற எழுத்துக்கள் இல்லாத தமிழ் எழுத்துக்கள் மட்டுமே கொண்ட பேர்களை இடுவதற்காவது முயற்சிக்க வேண்டும்.......

அப்பறம் பெயர்ல உள்ள அடுத்த மனவருத்தம் தருகிற விடயம்  initial சொல்லபடுகிற "முதல் எழுத்து "........
இந்த காலத்துல நம்மலாம் தமிழ்ல நம்ம பெயர எழுதுறதே கிடையாது. அப்டியே எப்பயாவது எழுதும்போதுகூட அது ஏன் முதல் எழுத்து initial -அ ஆங்கிலத்துல எழுதுறோம்.நிசமா எனக்கு தெரியல.
ஒரு ஆங்கிலேயன் அவன் பெயர "அ.robert williams " அப்டின்னு எழுதுறது மாதிரி கற்பனை   பாருங்க..

எவ்வளவு நகைப்புக்குரியதாக இருக்கு.அப்ப ஏன் நம்ம மட்டும் தமிழ் ல பெயர் எழுதுனாலும் initial அ ஆங்கிலத்துல எழுதுகிறோம்....கண்டிப்பா கூடாது.

சரி நம்ம எல்லாம் அலுவலகம்,வங்கி, அஞ்சலகம் அப்டின்னு எல்லா இடத்துலயும் ஆங்கிலத்துல பெயர் எழுத ஆரம்பிசுட்டம். எல்லா இடத்துலயும் தமிழ்ல பேர் எழுதுறது
சாத்தியம் இல்லைனாலும், நண்பர்களுக்கு குடுக்குற பரிசு, வாழ்த்து அட்டை  அவற்றிலெல்லாம் நம்ம பெயர தமிழ்ல எழுதுறதுக்கு நமக்கு முழு சுதந்திரம் இருக்கு....

இனிமே தமிழ் பிடிக்கும்னு சொல்ற ஒவ்வொரு ஆளும் தமிழ்ல பெயர் சூட்டுவதை வலியுறுத்தணும், தமிழில் முதல் எழுத்து  எழுதுவதையும் இன்றிலிருந்து பின்பற்றனும்........

9 comments:

நானும் இந்த மாதிரி அனுபவப் பட்டிருக்கேன். ஒருமுறை நண்பனின் அண்ணன் பையனுக்கு "அருண்மொழிவர்மன்"னு பெயர் சொன்னதுக்கு என்னை அயல்நாட்டவன் மாதிரி பார்த்தாங்க.
 
searching for my new born girl child a tamizh name in La, Laa, Li, Lee ... letters, but not many sites have info on it.
If some one could help me on that, I'd be much obliged.

Thanks,
Srinivasan
 
நான் இந்த வளைப்பக்கத்திற்க்கு புதியவன்.
மிகவும் அருமையான பதிவு.
இசை என்னும் உள்ளடக்கம் கொண்ட ஆண் இரட்டயர் பெயர் வேண்டும், ஆனால் "இசை" யென்று வெளிப்படயாகஇருக்ககூடாது(இசைச்செல்வன்).
 
நான் இந்த வளைப்பக்கத்திற்க்கு புதியவன்.
மிகவும் அருமையான பதிவு.
இசை என்னும் உள்ளடக்கம் கொண்ட ஆண் இரட்டயர் பெயர் வேண்டும், ஆனால் "இசை" யென்று வெளிப்படயாகஇருக்ககூடாது(இசைச்செல்வன்).
 
நான் இந்த வளைப்பக்கத்திற்க்கு புதியவன்.
மிகவும் அருமையான பதிவு.
இசை என்னும் உள்ளடக்கம் கொண்ட ஆண் இரட்டயர் பெயர் வேண்டும், ஆனால் "இசை" யென்று வெளிப்படயாகஇருக்ககூடாது(இசைச்செல்வன்).
 
நான் இந்த வளைப்பக்கத்திற்க்கு புதியவன்.
மிகவும் அருமையான பதிவு.
இசை என்னும் உள்ளடக்கம் கொண்ட ஆண் இரட்டயர் பெயர் வேண்டும், ஆனால் "இசை" யென்று வெளிப்படயாகஇருக்ககூடாது(இசைச்செல்வன்).
 
ட,டி,டு,மோ முதல் எழுத்து பெண் பிள்ளைகள் பெயர்கள் தேவை
 

வா
வி
வீ

ஓ. வரிசை பெண் குழந்தை பெயர்கள்
 

வா
வி
வீ

ஓ. வரிசை பெண் குழந்தை பெயர்கள்