அத்தனையும் ரசி....

(கடவுள் ஒரு மனிதனிடம் உரையாடுவது போன்று அமையபெற்றது இந்த பத்தி.
கடவுளுக்கும் எனக்கும் அவளவு பரிச்சயம் இல்லை.நான் கடவுளை வைரமுத்து போன்ற கரகர குரலுக்கும்ம் வெள்ளை ஆடைக்கும் இனிய தமிழுக்கும் உள்ளவராக, மொத்தத்தில் வைரமுத்துவின் நகலாக நினைத்து எழுதியது.வாசிக்கும்போது வைரமுத்து தமிழை கற்பனை செய்துகொண்டு வாசிக்கவும்)

கடவுள்    : அன்பிற்குரியவரே உமது பெயர் என்ன?

கார்த்திக் : என் பேரு கார்த்திக். சரி நீங்க யாரு...? உங்க பேரு என்ன ?

கடவுள்    : எனக்கென்று தனியே ஏதும் பெயரில்லை. தனியே பெயர் இல்லாததாலேயே என்னை கடவுள் என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.இந்த பிரபஞ்சத்தை படைத்ததில் எனக்கும் பங்கு உண்டு.

கார்த்திக் : oh god நீங்களா ? உக்காருங்க உக்காருங்க ?என்ன சாப்பிடறீங்க ? pepsi  coke என்ன வேணும் ?

கடவுள்    : அதெல்லாம் வேண்டாம்.எனக்கு உன்னுடன் சற்று நேரம் பேச வேண்டுமென்று  ஆசை, வா கடற்கரை வரையில் போய் பேசலாம்.

கார்த்திக் : I am sorry . 6 மணிக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு .இங்கயே பேசலாமா?
கடவுள்    :சரி. நான் கேட்பவற்றிற்கு முடிந்தவரை சரியான பதில் சொல்ல முயற்சி செய்              

(தொண்டையை கனைத்துக்கொண்டே  கடவுள் கரகர குரலில் ஆரம்பிக்கிறார்)

கடவுள்    : விடிய விடிய காத்திருந்து பசு கன்று போடும் அந்த மயிர்கூச்செறியும் இன்பமான நிகழ்வை ரசித்திருக்கிறாயா ?

கார்த்திக் :இல்லையே பார்த்தது இல்லையே ?

கடவுள்    : முட்டையின் ஓடு உடைத்து கோழி குஞ்சு வெளியே வரும் உலகின் அதி உன்னதமான நிகழ்வை நேரில் பார்த்திருக்கிறாயா?

கார்த்திக்  : ஐயோ இல்லைங்க..

கடவுள்      : நிலா , நீல வானம், கடல் , வானவில் பார்த்து ரசித்திருக்கிறாயா ?

கார்த்திக்   : ம் ம் நேற்றுதான் youtube லே பார்த்தேன்  ?

கடவுள்      : புல் நுனியில் பனித்துளி , பூவை சுற்றி ரீங்காரமிடும் வண்டு, தன் குஞ்சுகளுக்கு காகம் உண்டவூட்டும் அழகு பார்த்து ரசிதிருக்கிறாயா ?

கார்த்திக்   : oh பார்த்திருக்கிறேனே , youtube இல்.

கடவுள்      : அதென்னப்பா youtube ?

கார்த்திக்   : வீடியோ கொட்டி கிடக்கும் இணயதளம்.

கடவுள்      : அப்போ எதையுமே நேரில் பார்த்தது இல்லையா ?
                     காதலி கதை கதையாக பேசுகையில் முன்னே வந்து விழும் அந்த ஒரு கற்றை முடியின் அழகு ரசிதிருக்கிறாயா ?

கார்த்திக்   : நேற்று skype ல் பேசுகையில் ரசித்தேன்

கடவுள்      : அம்மா திட்டும் அழகு ரசிதிருக்கிறாயா ?

கார்த்திக்   : ம் அதுவும் நேற்று skype இல்

கடவுள்      : அடடா .... இப்படி தெரிந்திருந்தால் உன் ராசனைக்காக ஆயிரம் ஆயிரம் விடயங்கள் படைத்த நேரத்தில் 4 youtube  படைத்திருக்கலாம் போலிருக்கே.

கார்த்திக் .... இணையம் என்பது இணைய முடியாத இடத்தில் இருப்பவர்களை இணைப்பதற்காக... இணையக்கூடிய இடத்தில் இருப்பவர்களை பிரிப்பதற்காக அல்ல......


உன்னை சுற்றி ஒரு கோடி விஷயங்கள் ரசிக்க கிடக்க நீயோ ஒரு பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறாய்.............

உனக்கு வைரமுத்து தெரியுமா ? அந்த கருத்த தமிழ் கிழவன் ஒரு நல்ல ரசிகன் . அவன் இயற்கையை ரசித்து ரசித்து பேசுவான் அழகாக.... அவன் பேசுவதை ரசிக்கவே இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது......

எழுந்து வா கார்த்திக் ... வீட்டை விட்டு வெளியே வா ..
நிலா ரசி , வானம் ரசி, தாவணி பெண்ணின் சிரிப்பு ரசி ... நுங்கு வண்டி ஒட்டி குதூகலி ..

வயது பெண்கள் கூடி கும்மி அடிக்கும் அழகு ரசி , வயதான பாட்டி செய்யும் குலவைச் சத்தம் ரசி .
பனை ஓலையில் பதனி ரசி , ஒற்றை அடி வாய்க்கால் வரப்பில் காதலி வருகையில் அவள் எதிரே வழிவிடாமல் நின்று கொண்டு அவள் படும் அவஸ்தை ரசி ,

ஒரு வயது குழந்தை உன்னை மாமா என்று மழலையாய் அழைப்பதை ரசி , ஒரு வயதுப் பெண்ணையும் மாமா என்று அழைக்கச் சொல்லி ரசி.

சங்கத்தமிழ் ரசி , பாரதி கவிதை ரசி ,ராஜராஜன் வீரம் ரசி ,

நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரை சென்று ரசி .
காதலியிடம் திட்டு வாங்கி ரசி...தோழியிடம் குட்டு வாங்கி ரசி ....

உன் முதல் வகுப்பு வகுப்பறையில் போயி ஒரு நிமிடம் உட்கார்ந்து ரசி

கரைபுரண்டு ஓடும் ஆறு ரசி , மௌனமாய் கிடக்கும் சமுத்திரம் ரசி

ஆடும் மாடும் கூட அம்மா என்று சொல்வதை ரசி ...........

கல் மண் கடல் கவிதை காற்று பூமி ரசி ......................

ரசி ரசி ரசி ...... அத்தனையும் ரசி .....................

(போய் வருகிறேன் கார்த்திக் ............உன் கணிப்பொறியையும் சேர்த்து ரசி ....கடவுள் சொல்லிக்கொண்டே அங்கிருந்து நகர ...கார்த்திக் கணிப்பொறியை ரசிக்க ஆரம்பிக்கிறான் )

5 comments:

mudhalil un varigalai naan rasikkiren.
superb da.
 
vow!!!!!!!!
awesome bala....
really superb!!!
even i have enjoyed all the things when i was in my native till my schoolings, after then fully city life, i hate this life... i wanna go back to my hamlet...
 
Very nice..:)

Everyone has to enjoy this in their lifetime atleast once..
 
இதனையும் ரசித்தேன் நண்பா...
 
Really super.Keep it up Bala