இனி அவளும்

< கார்த்திக் ஒரு மென்பொருள் பொறியாளர் இவனுக்கு தமிழ் மேல உசுரு , கவின் அவரோட  செல்ல ராட்சசி ...சொந்தமா நிறுவனம் ஒன்னு நடத்திகிட்டு இருக்கா, கனிமொழி 5 வயசாகுற அவங்களோட குட்டி தேவதை.....சரி இப்ப வாங்க , அவங்க வீட்ல என்ன நடக்குதுன்னு எட்டி பார்க்கலாம்.....(எட்டாமலும் பார்க்கலாம் தப்பு இல்ல) >

டே கார்த்திக் கனிய இப்ப எங்கட கூட்டிட்டு போற சொல்லுடா .... நேத்து தான் , ஸ்கூல் ல admission போட்டச்சுல  அப்புறம் இன்னைக்கு எங்கடா கூட்டிட்டு போற....சொல்லுடா.....

அடியே குட்டிமா ,நீ போயி நல்லா அரை கிலோ சக்கர போட்டு பயத்தம் பருப்பு பாயசம் செஞ்சு வைப்பியாம்... நான் இன்னும் ஒரு மணி நேரத்துல திரும்பி வந்துடுவனாம்....
அப்புறம் என்ன விசயனு கண்டிப்பா சொல்றேன் ....சரியாடா
(விண்ணை தாண்டி வருவாயனு கார்த்திக் கைப்பேசி அவன கூப்பிட அவன் விண்ணை தாண்ட முடிலனாலும் அங்க இருந்த டேபிள்அ  தாண்டி போயி அத எடுத்தான்)

சொல்லு இளங்கோ. எங்க இருக்க ?
oh சரிடா அங்க இருந்து ரெண்டு தெரு தள்ளி வந்தா ஒரு அண்ணா தள்ளுவண்டி போட்டு துணிகள தேச்சுகிட்டு இருப்பார் .அவர்கிட்ட கேளுடா. அவர் நம்ம நண்பர். வீட்லயே கொண்டு வந்து விட்டுருவாருடா.......

"கனி...சீக்கிரம் வாடா இளங்கோ  வந்துட்டானாம் .நம்ம உடனே கிளம்பனும்." அழைப்பைத் துண்டித்துவிட்டு அலறினான் கார்த்திக் .

 "அப்பா  , 'இங்க பாருங்கப்பா', 'இங்க பாருங்கப்பா' , இன்னும் 60 நொடி ,அய்யா ரெடி.".எப்படி


சரிடா செல்லம் ....நான் வண்டிய துடச்சுக்கிட்ருக்கேன் கிளம்பி வெளில வாடா..

"டே கார்த்திக் இளங்கோ  எதுக்கு வராரு . ஏன் டா என்கிட்டே சொல்லல ..எங்கடா போற சொல்லுடா ..." சிணுங்கினாள் கவின்.

 (அதற்குள்ள இளங்கோ  அங்க வந்து சேர , நலம் விசாரிப்புகள் முடிந்து ,இளங்கோ  கார்த்திக் ,கனி மூன்று பேரும் கார்ல ஏறி கிளம்பிட்டாங்க ... கார்த்திக் ,இளங்கோ முன் இருக்கைல அமர ,கனி பின் இருக்கைல அமர்ந்துகொண்டாள். பேச்சை மெல்ல தொடங்கினான் இளங்கோ  )

கார்த்திக் ஒரு வழியா நீ நினச்ச மாதிரி கனிக்கு 5 வயசு ஆரம்பிச்சப்பரம் தான் ஸ்கூல்ல சேர்த்துருக்க ,பெரிய ஆளுடா நீ .....

 "குழந்தைங்கள சின்ன வயசுலேயே பள்ளிக்கு அனுப்பி, விளையாடற வயசுல அவங்கள கஷ்டப்படுத்துறதுல  எனக்கு உடன்பாடு இல்ல .. ஆனா அவ pre K G , L K G லாம் படிக்கல அப்டின்றத காரணமா காட்டியே  80 ஆயிரம் பறிச்சுகிட்டாங்க....."

 "கனி ரொம்ப புத்திசாலி .....அவள பத்தி நினைச்சா எனக்கே ரொம்ப ஆச்சர்யமா இருக்கு..நான் அவள்கிட்ட என்ன "டாடி" னு கூப்பிட கூடாது ,அப்பான்னு தான் கூப்பிடனும்னு ஒரே ஒரு தரம் சொன்னேன்.அத இன்னைக்கு வர ஞாபாகம் வச்சுட்டு என்ன்கிட்ட முடிஞ்சவர தமிழ்லையும் அவ அம்மாகிட்ட ஆங்கிலத்துலயும் பேசுறா..
எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா.." மூச்சுவிடாமல் சொல்லிமுடித்தான் கார்த்திக்

சரி கார்த்திக் .. "இப்பயாவது நம்ம எங்க போறோம்னு சொல்றியா ?" ....மெல்லமாய் கேட்டான் இளங்கோ .

இளங்கோ சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளாமலே தொடர்ந்தான் கார்த்திக்.
"நேத்து கனிய பள்ளிக்கூடத்துல சேர்த்துட்டு வந்ததுல இருந்து மனசுல ஒரே குழப்பம்.. இரவெல்லாம் தூக்கமே வரல..."

"நாங்க காதல் திருமணம் பண்ணிக்கிட்டதால ,கவின் கர்பிணியா இருந்தப்ப அவள பார்த்துக்க யாருமே இல்ல . ரொம்ப கஷ்டப்பாட்டுடா கவின். பிரசவத்தப்ப தாய் சேய் ரெண்டுல ஒன்னதான் காப்பாத்த முடியுனு டாக்டர் சொன்னப்ப என் உலகமே இருண்டு போயிடுச்சு . கவின் இன்னைக்கு இருக்கிறது அவளோட ரெண்டாவது பிறவி. அன்னைக்கு "ஆண்டவா நீ எங்கயாச்சும் இருந்தா அவள காப்பாத்திடு !" ன்னு கத்தி கதறுனது தாண்டா என்ன சாமி கும்பிட வச்சது."


 "அதுக்கப்பறமும் கனிக்கு 3 வயதாகும் வர அவள வளர்க்க கவின் ரொம்ப கஷ்டப்பட்டா. நான் கனிய பள்ளிக்கு அனுப்பகூடாதுன்னு முடிவு பண்ணுனேன் . பள்ளிக்கு போகமலேயே எல்லாத்தயும் கத்துக்குடுக்கனுனு நான் நினைச்சதோட 
 சரிடா. ஆனா சாயங்காலம் வேல முடிஞ்சு வந்ததும் சமைக்கிறது அது இதுன்னு ஆயிரம் வேலைக்கு இடையிலும் , கனிக்கு "அ" ல இருந்து இன்னைக்கு அவ பேசற "ஆங்கிலம்" வர எல்லாத்தையும் சொல்லிக்குடுத்தது என்னவோ கவின் தான்."

நேற்று பள்ளிக்கூட பதிவேட்டுல கனி பேர எழுதுனப்ப கா.கனிமொழி னு எழுதுனாங்க.அதுல இருந்து என் மனசுக்குல பல எண்ணங்கள் ஓடிக்கிட்டுருக்கு.

"உசுர குடுத்து பெத்தது அவ , உசுர குடுத்து வளத்தது அவ, ஆனா கனி பேருல எனக்கு மட்டும் இடம் , இது எந்த விதத்துல நியாயம் ". என்னால இத ஒத்துக்கவே முடியல.
அதான்டா பள்ளிக்கு போயி கனியோட பேரை கா.க.கனிமொழி னு மாற்றி எழுத சொல்ல  போறேன்டா .... முடிக்க முடியாமால் திணறினான் கார்த்திக்

"கார்த்திக் உன்ன நினச்சாலே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா. கண்டிப்பா பண்ணு. ரொம்ப நல்ல விஷயம் ." இளங்கோவின் குரல் தழுதழுத்தது.

நீயே சொல்லு இளங்கோ
"நம்ம தூங்காம இருக்கப்ப மட்டும்தான்  குழந்த அழுதா, தொட்டில ஆட்டிவிட்டு தூங்க வைக்கிறோம்.    நம்ம பேரை  குழந்தைக்கு முன்ன போடலாம்னா , குழந்த தூங்குற நேரத்துல மட்டும் தான் தூங்குற, அதுவும் பாதி தூக்கம தூங்குற அம்மா பேரை  குழந்த பேருக்கு முன்ன போடஇடமில்லையாடா ? "

" தாய்ப்பால் குடுக்குற காலத்துல முட்டை சாப்பிட்டா குழந்தைக்கு ஆகாது, பலாப்பழம்  சாப்பிட்டா  ஆகாதுன்னு பாட்டிங்க (தப்பு தப்பா) சொல்றத கேட்டு குழந்தைக்காக ஏதும் சாப்பிடாம இருக்க அம்மாக்கள் ஆயிரம் ஆயிரம் . ஆனா சிகரட் பிடிச்சுட்டு பக்கத்துல போன குழந்தைக்கு ஆகாதுன்னு சிகரட் பிடிக்காம விட்டுட்ட அப்பாக்கள் எத்தன பேர் ?
( சிகரட் பிடிக்கறதுக்காக குழந்த பக்கம் போகாதவங்க தான் இங்க உண்டு )"

அதான்டா  நான் மட்டும் கனி பேருல அவ அம்மா பேர சேர்ப்பதோட நிக்காம எனக்கு தெரிஞ்ச எல்லார்கிட்டயும் இத செய்ய சொல்லி கேட்க  போறேன்.
"முதல்  ஆள் நீ தான் , அதான் உன்னையே  கூட்டிக்கிட்டு  வந்துருக்கேன். நீ என்னடா சொல்ற ?"

கார்த்திக் இதுல சொல்றதுக்கு என்னடா இருக்கு ... எனக்கு ரொம்ப சந்தோசமாவும் , பெருமையவும் இருக்கு. நான் கண்டிப்பா பண்றேண்டா  . என் நண்பர்கள் எல்லார்டையும் சொல்றேன் ....

<பள்ளிப் பதிவேட்டில் பெயர் மற்றம் செய்துவிட்டு மூவரும் திரும்பி வர, பாயசம் தயார் பண்ணாமலே கவின் இருக்க..... வீட்டுக்குள் வந்த கனி கவினை கட்டிக்கொள்கிறாள் >

"டே கார்த்திக் இப்ப சொல்ல போறியா இல்லியா" செல்லமா அதட்டினாள் கவின்.

(சொல்றேன் செல்லம் னு சொல்லிகிட்டே பள்ளிப் பதிவேட்டின் நகலை காண்பித்து விளக்கம் சொன்னான் கார்த்திக் .,...)

"எங்கடி  செல்லம் பாயசம் ? " கொஞ்சினான்

"இப்ப என்ன ஸ்வீட் தானே வேணும்" கார்த்திக் காதில் கிசுகிசுத்தாள் கவின்.

"இளங்கோ அண்ணா கனி உங்கள கூப்பிடறா பாருங்க" சற்று சத்தமாகவே சொன்னால் கவின் ...............
 இளங்கோ கனியை தேடலானான் .............................................

குறிப்பு : தணிக்கை செய்யப்பட்டது 
(இளங்கோ அங்கிருந்து நகரவே , இனிப்புப் பரிமாற்றம் தொடங்கியது . எதிர்பாரத முத்தம் அமிழ்தினும் இனிது தானே )

இனி அவளும்

4 comments:

nice one.....Raj
 
Very nice :)

Every Men has to realise that..
 
sathyamana unmai da....
even after realising , every man has to follow this too...
 
sathyamana unmai....
even after realizing, every man has to follow this tooo