சிறகு முளைத்த மனசு - கவிதை தொகுப்பு -பகுதி 1

1.  ஊர் திருவிழாவில்
     உன்ன பாவாடை தாவணியில்
     பார்க்கும் வரை
    "ஊதா பாவாடை ,வெள்ளைச் சட்டையை"
     விட அழகான ஆடை இருக்கலாம்
     என்று நம்பியதில்லை....
    அன்று முதல்
    "நீ அணிந்த அரக்கு பாவாடையும்
     ஊதா தாவணியும் "

-------------++++++++++++++++++----------------------------------------

2  .நீ குளிக்கும்
    கிணறு என்பதால்
    எதையும் யோசிக்காமல்
    குதித்த போது
    கற்றுக்கொண்டதுதான் நீச்சல்

----------------------------+++++++++++++++++-------------------------

3.அன்பரசி டீச்சரை
அசிங்கமாய் பேசினதால்
ராமுவின் மீது 
கபடி ஆடிக்கொண்டிருந்த 
என்னை
நீ பார்த்த பார்வை
"இந்த வேண்டாத வேலை எல்லாம்
உனக்கு எதுக்கு ?" 
என்பது போல் இருந்தது......
"விழிமொழி" கற்றுக்கொண்ட
முதல் நாள் அது...

----------------------------++++++++++++++-----------------------------

4.நீயும் நானும்
ஒரே நாளில் மிதிவண்டி
கற்றுக்கொள்ள திடலுக்குப் போனோம்
கடைசியில்
"நீ மிதிவண்டி கற்றுக்கொண்டாய்"
"நான் உன்னிடம் மயங்கக் கற்றுக்கொண்டேன்"

----------------------------++++++++++++++--------------------------------

5."என் ராசா ,ஏழு நாள்
பூசைக்கும் தவறாம வந்துச்சு"
என்ற லட்சுமி பாட்டியிடம்
"உன் பின்னாலே வந்து,
உன் எதிரே அமர்ந்து,
உன் உதட்டசைவை
பின்தொடர்ந்ததை தவிர
வேறொன்றும் இல்லை"
என்பதை சொன்னதும்
கிடைத்து நான் வாங்கிய
முதல் பட்டம்........
"காளிப்பய " ,"காளிப்பய"
                                                                                             ------- ச.பாலச்சந்தர்

0 comments: